சேலம் அருகே முதல்வர் வருகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!: கொளுத்தும் வெயிலில் 2 மணி நேரம் அவதி..!!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் வெயிலில் நிற்கவைக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக பூத் கமிட்டி பெண் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை கொடுப்பதற்காக 108 பெண்கள் கும்ப கலசலனங்களுடன் கடும் வெயிலில் நிற்கவைக்கப்பட்டார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்கு வர 2 மணி நேரம் தாமதமானதால் கடும் வெயிலால் களைப்படைந்த பெண்கள் விழா நுழைவு வாயிலிலேயே தரையில் அமர்ந்துவிட்டார்கள். கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காக்கவைக்கப்பட்டதால் பெண்கள் களைப்படைந்தனர். ஆத்தூரில் முதல்வர் வருகைக்காக கொளுத்தும் வெயிலில் கலசத்துடன் சாலையில் அமர்ந்திருந்த பெண்களை காணும் போது மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையாக இருந்தது. இதில் பலரும் மயக்கம் வருவதை போன்று காணப்பட்டனர்.

Related Stories: