விஜயநாராயணம் குளத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் சிலை மீட்பு

நாங்குநேரி: விஜயநாராயணம் பெரியகுளத்தில் மராமத்து பணியின் போது கிடைத்த வள்ளி தெய்வானையுடன் முருகன் சிலை கேட்பாரற்று கிடக்கிறது.

நாங்குநேரி அருகேயுள்ள விஜயநாராயணம் பெரியகுளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மராமத்து பணிகள் நடந்தன. அப்போது குளத்தை தூர்வாரும் போது கிடைத்த மண்ணை இயந்திரங்கள் மூலம் அள்ளி கரையில் போட்டு பலப்படுத்தினர்.

அப்போது குளத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த ஒரே கல்லில் வள்ளி, தெய்வானையோடு முருகன் வேல்,  மயிலுடன் நிற்கும் சிலை கிடைத்தது. முருகன் திருவுருவம் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது. பழங்காலத்தைச் சேர்ந்த இந்த சிலை நூற்றாண்டைச் சேர்ந்தது? எங்கிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது? குளத்துக்குள் எப்படி வந்தது? என்பது போன்ற கேள்விகளுக்கு சரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

தற்போது குளத்தில் பணிகள் முடிந்த நிலையில் வடக்கு விஜயநாராயணம் செல்லும் வழியில் 7ம் கால் கிராமத்தின் பஸ் நிறுத்தத்திற்கு எதிரே உள்ள  கரையின் மண்சரிவில் முருகன் சிலை கேட்பாரற்று கிடக்கிறது.எனவே மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை மூலம் அந்த சிலையை பாதுகாக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: