சிபிஎஸ்இ பாடநூலில் குடுமியுடன் வள்ளுவர்: வைகோ கண்டனம்

சென்னை: சிபிஎஸ்இ பாடநூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளுவர் கரு பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழக அரசால் ஏற்பு அளிக்கப்பட்ட திருவள்ளுவரின் உருவப்படம், தமிழக அரசு அலுவலகங்களிலும், அரசுப் பேருந்துகளிலும் இடம் பெறச் செய்யப்பட்டது என்பதுதான் வரலாறு. திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சிந்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும். மத்திய அரசு உடனடியாக சிபிஎஸ்இ பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழக அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் உருவப் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும்.

Related Stories: