கோஷ்டி தலைவர்களிடம் முட்டி மோதும் காங்கிரசார்

சட்டமன்ற தேர்தல் வந்துவிட்டாலே கட்சிக்காக உழைத்த விசுவாசிகள் சீட் கேட்டு தலைவர்களை அணுகுவது தமிழக காங்கிரசில் வழக்கமான ஒன்று தான்.  ஏற்கனவே பல்வேறு கோஷ்டிகளாக பிரிந்து நிர்வாகிகள் பதவிகளில் கூட அதிக பங்கு கேட்டு போராடும் காங்கிரசில் எம்எல்ஏ ‘சீட்’களையா எளிதில் விட்டு விடுவார்கள்? திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும், அவற்றை எப்படி பங்கு போடலாம் என்ற காரசார பேச்சுவார்த்தை ஒவ்வொரு கோஷ்டிகளுக்குள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.      தங்களுக்கான தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என இப்போதே கோஷ்டி தலைவர்களை முட்டி மோத தொடங்கியுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தொகுதி பங்கீடு முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதால், கோஷ்டி தலைவர்களுடன் டெல்லிக்கு பறக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 தலைவர்களை பார்ப்பது, கட்சி பணிகளில் தீவிரம் காட்டுவது என தேர்தல் பணிகளில் தற்போது பிசியாக இருக்கும் நிர்வாகிகள் பலர், சீட் கேட்டு கட்சி தலைமையை அணுகும் படலம் தொடங்கிவிட்டது. இதனால் சத்தியமூர்த்திபவன் மட்டுமல்ல கோஷ்டி தலைவர்களின் வீடுகளிலும் முக்கிய நிர்வாகிகள் பலர் முற்றுகையிட்டு வருகின்றனர்.

Related Stories: