காக்களூர் ஆவின் பால் பண்ணையில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகம், பாலகம் திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பாக காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி வாயிலாக கடந்த 8ம் தேதி ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் நவீன பாலகம், ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் தரக்கட்டுப்பாடு ஆய்வகம் ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெ.த.கவிசந்திரன் தலைமை தாங்கினார்.

பொது மேலாளர் சுஜாதா அனைவரையும் வரவேற்றார். துணை பதிவாளர்கள் விஸ்வேஸ்வரன், து.சித்ரா, உதவி பொது மேலாளர் லிடியா மார்க்கரேட், கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மேலான்மை இயக்குனர் ஆர்.நந்தகோபால் மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மேலாளர்கள் கே.எஸ். உமா சங்கர், அனிஷ், சதீஷ்குமார், பிருந்தா, வெங்கடேஸ்வரலு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: