டிவியில பார்த்து போடுங்கப்பா...முதல்வர் லக லக

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று தூத்துக்குடி விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் சென்று தென்மாவட்டங்களில் 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ஸ்ரீவைகுண்டத்தில் பேசிய முதல்வர் வழக்கம் போல் அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து முதல்வர் பேசிக் கொண்டிருந்த போது, தொண்டை வறட்சியால் இருமினார். பின்னர் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்த முதல்வர் சிரித்து விட்டார். அதை படம் பிடித்த தொலைக்காட்சி நிருபர்களை நோக்கி, ‘தண்ணீ குடிச்சார்னு போடுப்பா... தண்ணீ குடிச்சாக்கூட முதல்வர் ஏதோ சத்தான பானம் குடிச்சாருன்னு சொல்லாதீங்க. டிவியில பார்த்து போடுங்கப்பா’ என்றார்.

Related Stories: