பெயரை மாத்தினா சீட் கிடைக்குமா? இப்படியும் ஒரு எதிர்பார்ப்பு

அரசியலை பொறுத்தவரை செல்வாக்கு ஒருபுறம் வாய்ப்புகளை வாரி வழங்கினாலும், அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டுமென அதிமுகவினர் எண்ணுகின்றனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் தங்களின் ஜாதக பலனையே அதிகம் நம்புகின்றனர். தேர்தல் வர உள்ள நிலையில் தங்கள் பெயர்களில் ஏதாவது மாற்றம் செய்யலாமா என யோசிக்கின்றனராம். அதிமுக நிறுவனரான எம்.ஜி.ராமச்சந்திரன், எம்ஜிஆர் ஆன பின்புதான் சினிமா, அரசியலில் பிரபலம் ஆனார். சமீபத்தில் கூட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனும், தேனி தொகுதி எம்பியுமான ஓ.ப.ரவீந்திரநாத் குமார், ரவீந்திரநாத் என பெயர் மாறியதும் கூட இப்படித்தான். எனவே, தங்கள் பெயர்களை மாற்றினாலோ, அல்லது ஏதாவது பரிகாரம் செய்தால் ஜெயிக்கலாமா, சீட் கிடைக்குமா என்ற எண்ணத்தில், அதிமுகவினர் பலர் கேரளாவில் உள்ள பிரபல ஜோதிடர்களை நோக்கி படையெடுக்க துவங்கி விட்டனராம். இதில் சில தென்மாவட்ட அமைச்சர்கள் இருவரின் பெயர்களும் அடிபடுகிறதாம்.

Related Stories: