வீட்டுக்கு ஒரு மூலிகை மரம் வளர்த்து நோய்களை விரட்டுவோம்: ஆயுஷ் மருத்துவர் அறிவுரை

தங்கவயல்: வீட்டுக்கு வீடு மூலிகை மரங்களை வளர்த்தால் நோய்கள் நம்மை நெருங்காது என்று கோலார் மாவட்ட ஆயுஷ் மருத்துவர் அறிவுறுத்தினார். கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா அரலேரி வட்ட பெங்கிகெரே கிராமத்தில் மாவட்ட ஆயுர்வேதிக் யோகா, யுனானி, சித்த மருத்துவ துறையான ஆயுஷ் மற்றும் கிராம பஞ்சாயத்து  சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில் மாவட்ட ஆயுஷ் மருத்துவர் ராகவேந்திரா செட்டி பேசும்போது, அனைத்து வியாதிகளையும் இயற்கை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும், ஒவ்வொரு வீட்டின் வளாகத்திலும் ஒரு மூலிகை மரம் வளர்க்க வேண்டும். இன்று உலகம் முழுவதும் இயற்கை மருத்துவத்தின்  மீது கவனம் திரும்பியுள்ளது. எனவே பொது மக்கள் மூலிகை செடிகளை வீடுகளில் வளர்க்க ஆர்வம் கொள்ள வேண்டும்’’ என்றார். அப்போது  மருத்துவர்கள் அவினாஷ், மஞ்சுநாத் மற்றும் கிராம் பஞ்சாயத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: