அமெரிக்காவில் கடும் பனிப்பொழி.: டெக்சாஸ் மாகாணத்தில் இரத்தத்தை உறைய வைக்கும் பனிப்பொழிவால் 21 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பனிப்புயலாலும், உறைய வைக்கும் கடுங்குளிராலும் 21 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

112 ஆண்டுகளுக்கு பிறகு டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதால், அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளது. மின்னுற்பத்தி தடைபட்டதால் டெக்சாசின் பல்வேறு நகரங்களில் மின் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பால் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவால் சாலை, கூரை, தரையெங்கும் பனிமூடி வெண்மையாகக் காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் குளிரில் வாடும் லட்சக்கணக்கான மக்கள் வெப்ப நிலையை உருவாக்கும் ஹீட்டரைக்கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். டெக்சாஸ் மாநிலத்தில் வெப்பநிலை-12° Fahrenheit அல்லது-23° செல்சியஸ் அளவுக்கு உள்ளது. இதனால் இரத்தத்தை உறைய வைக்கும் கடுங்குளிராலும் 21 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: