குன்னூர்: குன்னுாரில் இருந்து ரன்னிமேடு வரை பாரம்பரிய மலை ரயில் என்ஜினின் சோதனையோட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு தினமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. அதில், குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் மலை ரயில் பாரம்பரியம் மிக்க நீராவி என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது. இதில், பழமை வாய்ந்த எக்ஸ்-37397 என்ற எண் கொண்ட பர்னஸ் ஆயிலில் இயங்கும் என்ஜின் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது.