இந்தியா டாஸ் இழந்திருந்தால் 2-0 என பின்தங்கி இருக்கும்: பீட்டர்சன் சாடல்

சென்னை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 2வது டெஸ்ட் சென்னையில் நடந்து வருகிறது. இதில் பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துள்ளதால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 134 ரன்னில் சுருண்டது. இதனால் பிட்ச் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தொடரில் இந்தியா 1-0 என பின்தங்கி இருக்கும்போது, இதுபோன்ற பிட்ச் தயாரிப்பது துணிச்சலான நடவடிக்கை. இந்தியா டாசை இழந்திருந்தால் 2-0 என பின்தங்கி இருந்திருப்பார்கள், என தெரிவித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டுவிட்டரில், டெஸ்ட்டில் 5 நாட்கள் வரை ஆட்டம் செல்லும் வகையில் பிட்ச் அமைக்கவேண்டும். இது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் அல்ல. இந்தியா நல்ல நிலையில் இருப்பதால் பிட்ச் பற்றி எந்தவித காரணங்களையும் கூறவில்லை என தெரிவித்துள்ளார். இதேபோல் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன், பிட்ச் மிகவும் தந்திரமாக தயாரிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியில் முடிவை டாஸ் தீர்மானிப்பது தீர்க்கமான முடிவல்ல என கூறி உள்ளார்.

Related Stories: