தி.பூண்டி அருகே மேலமருதூர் தெற்கு பிடாகை பகுதியில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு வீணாக சாலையில் ஓடும் தண்ணீர்

*இது உங்க ஏரியா

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் தெற்கு பிடாகை பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் மெயின் லைனில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக ஓடுகிறது. திருத்துறைப்பூண்டி தாலுகா பகுதிகளில் கடந்த 2 மாதமாக பல கிராமங்களில் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் இதைவிட அதிகமாக குடிநீர் பிரச்னை இருக்கும். இந்நிலையில் நாகை மாவட்டம், துளசியாபட்டினம் வழியாக வேதாரண்யத்துக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட மெயின் பைப் லைனில் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலை மேலமருதூர் தெற்கு பிடாகை பஸ் நிறுத்தம் அருகில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் விணாக சாலையில் ஒடுகிறது. தண்ணீர் சாலையில் எந்த நேரமும் தேங்கி நிற்பதால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

இது குறித்து இந்த பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் மாரியம்மாள் முருகுபாண்டியன் கூறிகையில், மேலமருதூர் தெற்கு பிடாகை பஸ் நிறுத்தம் எதிரில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட மெயின் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் ஒடுகிறது.

இது குறித்து ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்திலும் பேசியுள்ளேன். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் மெயின் பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: