வங்கதேச அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  முதல் இன்னிங்ஸில் விண்டீஸ் அணி 409 ரன்கள் அடிக்க, வங்கதேசமோ 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில், 113 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய விண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸை 117 ரன்களுக்கே இழந்தது. இதன்மூலம், வங்கதேச அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 2 நாட்கள் ஆட்டம் கையில் இருந்தாலும்கூட, வங்கதேசத்தால் பொறுமையாக ஆடி இலக்க‍ை எட்ட முடியவில்லை. துவக்க வீரர் தமிம் இக்பால் மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்தார். மெஹிதி ஹாசன் 31 ரன்கள் அடிக்க, மொமினுல் ஹேக் 26 ரன்களை அடிக்க, 61.3 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது.

Related Stories: