மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் மாநிலங்களவை எம்.பி..: மத்திய அரசு தீர்மானத்திற்கு மாநிலங்களவை ஒப்புதல்

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை  எம்.பி ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் தீர்மானத்துக்கு மாநிலங்களவை  ஒப்புதல் வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த அக்டோபர் மாதம் தலைவர், துணை வேந்தர் உள்ளிட்ட 14 உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.

அந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருக்கும் வி.எம்.கடோச் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த 14 உறுப்பினர்கள் தவிர மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேலும் 3 எம்.பி-க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். அதில் இருவர் மக்களவையில் இருந்து நியமிக்கப்படுவார்கள். ஒருவர் மாநிலங்களவையிலிருந்து நியமிக்கப்படுவர்.

அந்த அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி ஒருவரை மருத்துவமனையின் உறுப்பினராக நியமிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் முன்மொழிந்த தீர்மானத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியுள்ளது. எம்.பி-க்களில் யார் அந்த உறுப்பினர் என்பதை மத்திய அரசு தேர்வு செய்து அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: