நெல் அறுவடை முடியும் முன்பே கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை பகுதியில் கதிர் அறுவடை முடியும் முன்பே அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என திருவாடானை தாலுகா அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நெல் கதிர்கள் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாகிவிட்டது.

இந்நிலையில் வீணாகிப் போனது போக மீதமுள்ள நெல்லை அப்படியே வயலில் விட்டுவிட மனதில்லாமல் விவசாயிகள் அதிக வாடகை கொடுத்து நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். இப்படி அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் திருவாடானை பகுதியில் பெரிய கீரமங்கலம், திருவெற்றியூர், சனவேலி ஆகிய பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது தீவிரமாக அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யும் வகையில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: