6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படாது. அதேநேரத்தில் மத்திய அரசு நிதி உதவியோடு 6 முதல் 8ம் வகுப்பு வரை டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறக்க இதுவரை ஆய்வு நடக்கவில்லை. அதுகுறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில்  தேர்தல் கடந்த இரு நாட்களாக ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவுக்கேற்ப 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: