சரியாக சம்பளம் வழங்காததால் கிட்னியை விற்பனை செய்ய முன்வந்த அரசு பஸ் நடத்துனர்

கொப்பள்: கொரோனா தொற்று காரணமாக சரியாக சம்பளம் வழங்கப்படாததால்  குடும்பம் நடத்துவதற்கு பண தேவைக்காக அரசு கண்டக்டர் ஒருவர் தன் கிட்னியை விற்பதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொப்பள் அருகேயுள்ள குஷ்டகியை சேர்ந்தவர் அனுமந்த கலிகேர். இவர் கடந்த 20 வருடங்களாக கங்காவதி அரசு டிப்போவில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சரியாக சம்பளம் வழங்கப்படாததால் வீட்டு வாடகை, ரேஷன் வாங்க என்று குடும்பம் நடத்த பெரும் சிரமப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பண தேவைக்காக தன் கிட்னியை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அனுமந்த கூறுகையில், ``கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை. எனது மூன்று குழந்தைகள், மனைவி, தாய் ஆகியோரை கவனித்து கொள்ள முடியவில்லை. இதனால் பல இடங்களில் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்தேன். தற்போது வாங்கிய கடனை கொடுக்க முடியாமலும் குடும்பம் நடத்த பணம் இல்லாமலும் கஷ்டப்படுவதால் எனது கிட்னியை விற்க முன்வந்துள்ளேன் என கண்ணீருடன் தெரிவித்தார்’’.

Related Stories: