ரயில் கட்டணம் குறித்த எம்பிக்கள் கேள்வியும்.. மத்திய அரசு பதிலும்

டெல்லி: விமான பயண கட்டணத்தை விட ரயில் பயண கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்திருப்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதோடு நிற்காமல் ரயில் பயண கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் உறுப்பினர் சிலர் எழுப்பும் கேள்விகள் வித்தியாசமாக இருக்கும் அப்படி எம்பிக்கள், நயாப்சிங், ராம்சங்கர் கத்தாரியா, ஆகியோர் ரயில் கட்டணம் உயர்வு குறித்து மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்தது மத்திய அரசு.

* எம்பிக்கள் - பல வழித்தடங்களில் விமானத்தை விட ரயில் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

* மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம்: ரயில் கட்டணம் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்துள்ளதை ஒப்புக்கொண்டது.

விமானப்போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் முற்றிலும் வெவ்வேறானவை.  

பயணிகள் எண்ணிக்கை, செலவுகள் வேறுபடக்கூடியது ஒப்பிடுவது சரியல்ல

ரயில்களில் ஆண்டு முழுவதும் ஒரே கட்டணம்; விமானத்தில் அவ்வாறு கிடையாது என்றும் விளக்கம்

சில நேரங்களில் விமானத்தை விட ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதையும் ஒப்புக்கொண்டது.

கட்டணம் அதிகம் என கூறினாலும், ரயில் சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையவில்லை

2017-18-ம் நிதியாண்டில் 48,643 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும், 2018-19-ல் 51,066 கோடி ரூபாயாகவும் விளக்கம்.

ஓரே ஆண்டில் ரயில்வே கட்டண பயணம் மூலம் ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: