ரிஷிகங்கா ஆற்றில் நீர்மட்டம் அதிகரிப்பு: சாமோலி சுரங்கபாதையில் மீட்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

சாமோலி: ரிஷிகங்கா ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததால் சாமோலி மாவட்டத்தில் மீட்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரகண்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரிஷிகங்கா ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடையாமல் எச்சரிக்கையாக செயல்படுமாறு சாமோலி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி பனிப்பாறை வெடித்ததைத் தொடர்ந்து மாவட்டத்தில் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பெரு வெள்ளத்தால் நுற்றுக்கணக்காக மக்கள் பாதிக்கப்பட்டன அதன் காரணமாக  தற்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகல் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மெளர்யா இன்று சாமோலி மாவட்டத்தில் சுரங்கப்பாதையில்  உள்ளவர்களை மீட்க்கும் பணி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.  அங்கு நடந்து வரும் மீட்பு நடவடிக்கைகளை கையகப்படுத்த  ஐடிபிபி அதிகாரிகளை அவர் சந்தித்தார். இன்னும் சிலர் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும்,  என்டிபிசி குழு செங்குத்து துளையிடுதலைப் பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐடிபிபி டிஐஜி அபர்ணா குமார் கூறியுள்ளார்.

சாமோலியில் துண்டிக்கப்பட்ட கிராமங்களில் தொங்கும் பாலம் கட்ட ஐ.டி.பி.பி குழுவினர்  உதவுகின்றன. இந்த பாலத்தின் மூலம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது ரிஷிகங்கா ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: