தேவாங்கா சமூகத்தினருக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்: மாவட்ட உதவி கலெக்டரிடம் மனு

சாம்ராஜ்நகர்: கர்நாடகாவில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் தேவாங்க சமூகத்தினர் நலனுக்காக தனி வளர்ச்சி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவாங்க சமூகத்தினர் ஊர்வலமாக சென்று மாவட்ட உதவி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

சாம்ராஜ்நகரில் உள்ள சாம்ராஜேஸ்வரா கோயில் வளாகத்தில் தென்னிந்திய தேவாங்க சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமையில் கூடிய தேவாங்க சமுதாயத்தினர் ஊர்வலமாக சென்று மாவட்ட உதவி கலெக்டர் கார்த்தியாயினியிடம் மனு அளித்தனர்.

பின்னர் இதுகுறித்து வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தேவாங்க சமூகத்தினர் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் இன்னும் ஏழ்மையில்தான் வசிக்கின்றனர். மற்ற சமூகத்தினரின் வளர்ச்சிக்கு அரசு வாரியம் அமைத்துள்ளதை போல் தேவாங்க சமூகத்தினரின் வளர்ச்சிக்கும் அரசு வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும். இதன் மூலம் தேவாங்க சமூகத்தினர் வாழ்க்கை தரம் உயரும். தேவாங்க சமூக வளர்ச்சி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.இவ்வாறு வெங்கடேஷ் தெரிவித்தார்.

Related Stories: