ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் தெளிவு: 3 முறை அதிமுக ஆட்சி அமைப்பது கனவாக மட்டுமே இருக்கும்...எம்.பி. கனிமொழி பேச்சு.!!!

மதுரை: மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைப்பது கனவாக மட்டுமே இருக்கும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைபோல், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனமொழியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்தில் விடியலைநோக்கி_ஸ்டாலினின் குரல் பரப்புரையின் பொது மக்களிடம் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி உரையாற்றினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எம்.பி.கனிமொழி,  செல்லூர் பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மதுரையின் வளர்ச்சிக்காக திமுக ஆட்சி காலத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பது அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் என தெரிவித்த அவர், ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாக கனிமொழி தெரிவித்தார்.

Related Stories: