வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி தொடக்க விழா

காஞ்சிபுரம்: ஏனாத்தூர் உழவர் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கான திறன் மேபாட்டு பயிற்சியான வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி விழா நேற்று தொடங்கியது. உழவர் பயிற்சி மையத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். வேளாண்துறை மண்டல இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி பயிற்சியை தொடங்கி வைத்தார். வேளாண் துறை இணை இயக்குநர் ஸ்ரீவத்ஸவா சிறப்புரையாற்றினார். இந்தப் பயிற்சிக்கு அட்மா, குடுமியான்மலை மற்றும் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிலையம் நிதி உதவி செய்தது. இதில் 28 வெள்ளாட்டு பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர். பயிற்சியில் அறிவியல் ரீதியான முறைகளில் வளர்க்கும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories: