விலைமதிப்பில்லாத விவசாயிகளின் உயிரை காக்கலாம்: ஆதரவோடு நிதி உதவி வழங்கிய அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்..!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் ஆதரவு வழங்கியதோடு நிதியுதவியும் வழங்கியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்றுடன் 73வது நாளாக டெல்லியில் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (பிப். 6) டெல்லியிலும், பிற மாநிலங்களில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ‘ஜக்கா ஜாம்’ என்ற பெயரில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ’’இந்தியாவில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஒற்றுமையுடன் இணைந்து நிற்கிறோம்’’ என்று அவர் குரல் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பிரபல பாப்பாடகி ரிஹானா, நடிகை மியா கலிஃபா உள்பட பலர் ஆதரவு கருத்து தெரிவித்தனர். வெளிநாட்டினரின் ஆதரவுக்கு இந்திய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் உண்மையை முழுமையாக அறிந்து கருத்துத் தெரிவிக்கும்படி, வெளிநாட்டு பிரபலங்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் அமேரிக்க நாட்டின் தேசிய கால்பந்தாட்ட லீக் போட்டியான NFL தொடரின் நட்சத்திர வீரரான ஜூஜூ ஸ்மித், போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, நிதி உதவியும் கொடுத்து உதவியுள்ளனர். இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட் பதிவில்; “உங்களுடன் இதை பகிர்வதில் மகிழ்ச்சி. போராடி வரும் இந்திய  விவசாயிகளின் மருத்துவ தேவைகளுக்காக 10000 அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளேன். இந்நேரத்தில் அது உதவியாக இருக்கும் என கருதுகிறேன். இதன் மூலம் விலைமதிப்பில்லாத விவசாயிகளின் உயிரை காக்கலாம்” என ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: