பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை:  தமிழக சட்டப் பேரவையின்  நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர்   கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று வரை கூட்டத் தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டு, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.   இதையடுத்து, நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் உறுப்பினர்கள் பேசினர். நேற்றைய கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசினார்.  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா உள்பட மொத்தம் 8 மசோதாக்கள் இந்த தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து, சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் ெகாண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் பேரவையை ஒத்திவைத்தார்.  இதன் காரணமாக தமிழகத்தில் 15வது தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

Related Stories: