வியாபாரிகளை கண்டுகொள்ளாத அரசு

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, புளி போன்ற மளிகை பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. இதற்கு தற்போது உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வும் ஒரு காரணம்  என்று கூறப்படுகிறது. இதனால் சத்தமில்லாமல் மளிகை பொருட்களின் விலை  கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  இதனால், ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஓட்டலில் தொழிலில் ஈடுபடும் எங்களை போன்றவர்கள் தொழிலை நடத்தவே கடினமாக உள்ளது. அப்படி கஷ்டப்பட்டு கடன் வாங்கி வியாபாரம் செய்தால் கூட எங்கே  வியாபாரம் ஆகுது. எதை எடுத்தாலும் பணம் கொடுத்து தொழில் நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது. அதற்காக நாங்கள் கொடுக்கும் பொருட்களின் விலையை  ஏற்றினால் வியாபாரம்  படுத்துவிடும்.

இதற்கிடையில் வாடகை கட்டணம், உயர்வு, மின்கட்டண உயர்வு என்பது மண்டையை பிளக்கிறது. டீக்கடை நடத்துபவர்கள் நிலையோ அந்தோ பரிதாபமாக உள்ளது. பால் நாளுக்கு ஒரு விலை அவர்களை பாடாய்ப்படுத்துகிறது, இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரி என இவர்களின் தொல்லையாலும் தொழில் நடத்த முடியாத நிலை உள்ளது. ஏராளமான ஓட்டல்களும், டீக்கடைகளும் காணாமல் போய்விட்டன. இந்த ஆட்சியில் உள்ளவர்கள் வியாபாரிகளை பற்றி நினைப்பதில்லை எங்கள் வேதனை அவர்களுக்கு தெரிவதில்லை இந்த ஆட்சி எப்போது முடியும் எங்கள் பிழைப்பு எப்போது விடியும் என்று எதிர்பார்த்து காத்து நிற்கிறோம்.

Related Stories: