யாரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதம் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தலுக்கான அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதியில் யாரிடம் மனு தாக்கல் செய்ய  வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. இதன்படி தேர்தலை வருவாய்த்துறையினர் நடத்துகின்றனர். தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக சப்-கலெக்டர் ஒருவர் நியமிக்கப்படுவார். அவர்தான் தேர்தல் தொடர்பான  அனைத்து முடிவுகளும் எடுக்கக் கூடியவர். அவருக்கு உதவியாக 2 தாசில்தார்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர். இவர்கள் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அமர்ந்து வேட்பு மனுக்களை காலை 11 மணி  முதல் மாலை 3 மணி வரை பெறுவர். வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

Related Stories: