சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட விவகாரம்.: சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக-வினர் புகார்

சேலம்: பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா சென்ற காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்ததற்கு காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு கடந்த 27-ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவரின் உடல்நிலை சீராக இருந்ததால் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா சில நாட்கள் ஒய்வு எடுப்பதற்காக பெங்களுருவில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் சென்ற காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. இதற்க்கு அதிமுக தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சண்முகம், பேரவை செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாரிடம் நேரில் சென்று புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது, சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட நிலையில் காரில் அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: