செங்கோட்டை வன்முறை வழக்கு.. என் குடும்பத்தினரை தொந்தரவு செய்யாதீங்க! : தலைமறைவான நடிகர் வீடியோ வெளியீடு

புதுடெல்லி: செங்கோட்டை வன்முறை வழக்கில் என் குடும்பத்தினரை போலீசார் தொந்தரவு செய்யக் கூடாது என்று தலைமறைவாக உள்ள பஞ்சாப் நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார். ேவளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்குபதிந்து அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட், லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் முறையாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ெபாய்யானவை. அதனை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை சேகரித்து வருகிறேன். 2 நாட்களுக்குப் பிறகு போலீசார் முன் ஆஜராவேன். எனவே, போலீஸ் புலனாய்வு அமைப்புகள் எனது குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது பேஸ்புக் பக்கத்தில் தீப் சித்து வெளியிட்ட வீடியோவில், ‘என்னைப் பற்றி தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றனர். புலனாய்வு அமைப்புகள் உண்மைகளை கண்டறிவது அவசியம்’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: