யானைப்ப பசிக்கு சோளப் பொறியைப் போன்று நிதி ஒதுக்கீடு: மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து.!!!

டெல்லி: யானைப்ப பசிக்கு சோளப் பொறியைப் போன்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2021-2022-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வித்தியாசமாக டிஜிட்டல் முறையில் Union Budget என்ற மொபைல் செயலி மூலம் இன்று நாடாளுமன்றத்தில தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அதிகளவு சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுகள் குறித்த அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 8-வது பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், பல்வேறு குற்றச்சாட்டுகவை முன் வைத்தார். அவை பின்வருமாறு:

* பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை ஏற்க முடியாது.

* பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கும் முடிவு மக்களை பாதிக்கும்.

* தேர்தல் நடைபெறும் மாநிலங்ளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

* சிறு, குறு நிறுவனங்களுக்கு குறைவான அளவு நிதி ஒதுக்கீடு.

* ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டதை நிதியமைச்சர் அறிந்திருக்கவில்லை.  

* குறைந்த வட்டி கடன் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Related Stories: