குருபர் சமூகத்தினர் போராட்டத்தின் மூலம் தான் முக்கிய பொறுப்புகளுக்கு வர முடியும்: மாஜி அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா பேச்சு

பெங்களூரு: போராட்டத்தின் மூலம் தான் குருபர் சமூகத்தினர் முக்கிய பொறுப்புகளுக்கு வர முடியும் என்று முன்னாள் அமைச்சர் எச்.எம். ரேவண்ணா தெரிவித்தார். சிக்கபள்ளாபூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா டவுன் பகுதியில் நடைபெற்ற பீரேஷ்வரா கூட்டுறவு வங்கியின் முதலாம் ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எச்.எம். ரேவண்ணா பேசியதாவது: ``தாழ்த்தப்பட்ட சமுதாயமான குருபர் மக்கள் பொருளாதார ரீதியாகவும், கல்வி, அரசியல் ரீதியாகவும் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் போராட்டத்தின் மூலம் மட்டுமே சாத்தியம். குருபர் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு கூட்டுறவு வங்கி, கல்வி நிறுவனங்கள் திறப்பதால் அதிகமான உதவிகள் ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் அதிகமான சேமிப்பு வைக்க சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள் முன்வர வேண்டும். அதே போல் கடன் பெற்றவர்கள் அதை சரியாக திருப்பி செலுத்தினால் மட்டுமே வங்கியை காப்பாற்ற முடியும். அதே போல் கடனை சரியாக திருப்பி செலுத்தும் உறுப்பினர்களை கவுரவப்படுத்த வேண்டும். இப்படி செய்தால் அவர்களை ஊக்கப்படுத்தியதாக இருக்கும்’’ என்றார். இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. என்.எச். சிவசங்கர்ரெட்டி பேசியதாவது: ``வங்கியின் முக்கிய நோக்கம் விவசாயிகள், ஏழைகளின் வளர்ச்சி மட்டுமே.

கடந்த நாட்களாக சில வங்கிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இதில் ெபாது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இது கண்டிக்கத்தக்கது. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். அதன் பின் அனைவருக்கும் வங்கி சலுகைகள் கிடைத்தது. தாலுகாவில் குருபர் சமூகத்துக்கு அரசியலில் பொறுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நகரசபை தலைவர் பதவி வழங்கப்படும். அதே போல் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் அதிகமான வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். அதே போல் கடனை சரியாக திருப்பி செலுத்தும் உறுப்பினர்களை கவுரவப்படுத்த வேண்டும். இப்படி செய்தால் அவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும்.

Related Stories: