வடக்கு மாநகராட்சியில் ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி நிலுவை சம்பளம் ரூ.516 கோடி விடுவிப்பு: பணிக்கு திரும்ப மேயர் வேண்டுகோள்

புதுடெல்லி: எம்சிடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களின் சம்பளத்திற்காக ரூ.516.67 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாநகராட்சி(என்டிஎம்சி) மேயர் ஜெய் பிரகாஷ் தெரிவித்தார். டெல்லியில் மூன்று மாநகராட்சிகளை சேர்ந்த ஊழியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அனைவரும் தங்களது நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், ஊழியர்களின் நிலுவை சம்பளத்தை வழங்குவதற்காக நிதிய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

இதுபற்றி என்டிஎம்சி மாமன்ற கூட்டத்தின் போது மேயர் ஜெய் பிரகாஷ் தெரிவித்ததாவது: மாநகராட்சியின் ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்குவதற்காக ரூ.516.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தனது வருவாயிலிருந்து பணியாளர்களுக்கு சம்பளத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. துப்பரவு பணியாளர்களின் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான நிலுவை சம்பளத்தொகை ரூ.228 கோடியாகும்.

அதேபோன்று ‘டி’ பிரிவு ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளத்தொகை ரூ.43 கோடியாகும். மேலும், துணை மருத்துவ ஊழியர்களின் அக்டோபர்-சடிம்பர் மாதத்திற்கான சம்பள நிலுவைதொகை ரூ.8.07 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, செப்டம்பர் மாதத்திற்கான சி பிரிவு ஊழியர்களின் சம்பளம் ரூ.18.23 கோடியும், செவிலியர்களின் அக்டோபர்-டிசம்பர் மாதத்திற்கான சம்பளம், ரூ.4.69 கோடியும், ஆசிரியர்களின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சம்பளம் ரூ.120.46 கோடியும், பி பிரிவு ஊழியர்களின் சம்பளம் ரூ.8.64 கோடியும், ரெசிடென்ட் மருததுவர்களின் நவம்பர் மாதத்திற்கான மருத்துவர்களின் சம்பளம் ரூ.6.18 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இவைதவிர, பென்சன்தாரர்களின் ஜூலை மாதத்தொகையாக ரூ.55.15 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மேயர் தெரிவித்தார்.

மேலும், ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளையும் மாநகராட்சி நிர்வாகம் அறிந்திருப்பதாகவும், அனைத்து பிரச்சினைகளையும் விரைவாக தீர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மேயர், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மாநறகராட்சிகளின் நிதி நிலையை தள்ளாட்டத்துக்கு கொண்டு செல்ல ஆம் ஆத்மி அரசு முயற்சிக்கிறது. அதன்காரணமாகவே எம்சிடிகளுக்கு விடுவிக்க வேண்டிய நிதியை வழங்கமறுக்கிறது என்றும் குற்றம்சாட்டினார். துப்பரவு பணியாளர்களின் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான நிலுவை சம்பளத்தொகை ரூ.228 கோடியாகும்.

Related Stories: