கொலை மிரட்டல் எதிரொலி விஷம் குடித்து விவசாயி தற்கொலை: மனைவி போலீசில் புகார்

தங்கவயல்: தங்கவயலில் நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயி மிரட்டப் பட்டதால், மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தங்கவயல் அடுத்த பேட்டராயணள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு நாத்(40). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த அமரேஷ் பாபு என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மஞ்சுநாத் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவர் மனைவி சுகுணா மாரிகுப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், பரம்பரையாக எங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை அமரேஷ் பாபு அபகரித்து கொண்டார். இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனால் வஞ்சம் கொண்ட அவர் என் கணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்தார். இதனால் மனம் உடைந்த என் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: