சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல் பேட்டி

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று உள்ளாட்சிகளில் தனது கட்சி செய்யப்போகும் மாற்றங்களை தேர்தல் வாக்குறுதி அறிக்கையாக வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜனநாயகத்தின் பலன் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர வேண்டும். அதற்கு மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். இந்தியாவில் ஒன்றரை லட்சம் பேருக்கு ஒரு பிரதிநிதியாக 5 ஆயிரம் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால் 500 பேருக்கு ஒரு பிரதிநிதியாக உள்ளாட்சி மன்றத்தினர்தான் இருக்கிறார்கள். எங்கள் கூட்டணி மக்களை நோக்கி இருக்கிறது. நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம். அவர்கள் அரசியலில் வல்லவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம் என்றார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் உள்ளாட்சி அமைப்புகள் குறித்த தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில்  கூறப்பட்டிருப்பதாவது:

* பஞ்சாயத்துகளின் 3 அடுக்குகளுக்குமான நிதி திரட்டப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கிடைக்க செய்யப்படும்.

*  பஞ்சாயத்துகளின் செயல்பாடுகள், வரவு செலவுகள் ஆன்லைன் வழியாக கண்காணிக்க வழி செய்யப்படும்.

* உள்ளாட்சி மன்றங்களின் குறைகளை தீர்ப்பதற்காக உள்ளாட்சி முறைமன்ற நடுவத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

* உள்ளாட்சி உறுப்பினர்களை திரும்பப் பெறும் உரிமை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும்.

* பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

இதேபோன்று நகராட்சிகளுக்கான வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள்:

* ஒருங்கிணைந்த தமிழ்நாடு நகர்புற உள்ளூர் தன்னாட்சி சட்டம் இயற்றப்படும்.

* நகர்புற உள்ளூர் தன்னாட்சி அமைப்புகளில் வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

Related Stories: