கல்லூரி பேராசிரியை யானை மிதித்து பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் ஷஹானா சதர் (26). கோழிக்கோடு தாரு நூஜூம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியல்துறை தலைவராக பணியாற்றி வந்தார். வயநாடு கல்பற்றா வனப்பகுதியில் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு உள்ள ரிசார்ட் கூடாரம் ஒன்றில் 2 உறவினர்களுடன் தங்கி இருந்தார். இந்த ரிசார்ட்டை சுற்றி 3 பக்கங்களிலும் காடுகள் உள்ளன. இங்கே மொபைல் சிக்னல் கிடைக்காது.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் உணவு அருந்திய பிறகு ஷஹானா சதர் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த காட்டு யானை ஷஹானா சதரை பிடித்து தரையில் போட்டு மிதித்து கொன்றது. இதைக்கண்டு அவருடன் இருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தப்பிக்க தலைதெறிக்க ஓடி உயிர் பிழைத்தனர்.

Related Stories:

>