சின்னமனூர் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

சின்னமனூர்: சின்னமனூரில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியி–்ன் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் நேதாஜியின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சின்னமனூர் அருகே வெள்ளையம்மாள்புரத்தில் இருந்து தென்பழஞ்சி மலையடிவாரம் வரையில் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது.

சின்னாடு, நடுஞ்சிட்டு மாடு, பூஞ்சிட்டு மாடு என 3 வகைகளாக பிரித்து பந்தயத்தை நடத்தினர். பார்வர்ட் பிளாக் மாவட்ட பொது செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். நகர செயலாளர் செல்வம் துவக்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 60 இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories:

>