கேரளாவில் இடுக்கி அருகே சிறுத்தையை கொன்று சமைத்து தின்ற கும்பல்: 5 பேர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மாங்குளம் பகுதியில் ஒரு கும்பல் சிறுத்தையை வேட்டையாடி கொன்றதாக வனத்துறை அதிகாரி உதய சூரியனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுத்தையை வேட்டையாடியது முனிப்பாறை பகுதியை சேர்ந்த வினோத், குரியாக்கோஸ், பினு, சாலிம் குஞ்சப்பன், வின்சென்ட் ஆகியோர் என தெரிய வந்தது. வனத்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம்  நடத்திய விசாரணையில், வினோத்துக்கு அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அது வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி. இக்கும்பல் கடந்த பல ஆண்டுகளாக முள்ளம் பன்றி உட்பட பல வன விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் வன விலங்குகளை பிடிக்க வைத்த பொறியில் 6 வயதான சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. அதை கொன்ற அவர்கள், சமைத்து சாப்பிட்டுள்ளனர். மேலும் அதன் தோல்,  பற்கள், நகம் போன்றவற்றை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>