சைக்கிள் குடோனினில் பயங்கர தீவிபத்து: தெர்மல் ஸ்கேனர் முறையில் தீயை அணைத்த வீரர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரபல சைக்கிள் விற்பனை கடையின் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 200 சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின. தெர்மல் ஸ்கேனர் முறையில் வீரர்கள் தீயை அணைத்தனர். காஞ்சிபுரம் காமராஜர் சாலை மற்றும் மேற்கு ராஜவீதியில் பிரபல சைக்கிள் விற்பனை கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கான குடோன், ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ளது. இங்கு கம்பெனிகளில் இருந்து வரும் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் பாதுகாத்து, கடைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் நேற்று மாலை குடோனில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடங்களில், குடோன் முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் இட நெருக்கடியாக இருந்ததால் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் முதன்முறையாக தெர்மல் ஸ்கேனர் முறையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். புகாரின்படி சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: