2 நாள் பயணமாக ஜனவரி 18-ல் டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி...! பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டம்

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக ஜனவரி 18-ல் டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து முதலமைச்சர் நேரில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருடன் தலைமைச் செயலாளர், உள்த்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளும் செல்கின்றனர். தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க.,  தே.மு.தி.க., த.மா.கா., மற்றும் புதிய நீதிக்கட்சி இடம் பெற்றன. கடந்த 2020 நவம்பரில், சென்னையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியை உறுதி செய்தனர்.

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நேற்று தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், வரும் 18 ம் தேதி முதல்வர் பழனிசாமி, டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அரசியல் ரீதியாக, அதிமுக - பா.ஜ., கூட்டணியை உறுதி செய்வதுடன், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யவும் இந்த சந்திப்பு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14ம் தேதி சென்னை வரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, 6 மணி நேரம் மட்டுமே இங்கு உள்ளார். அப்போது துக்ளக் விழாவில் பங்கேற்கும் அவர், பின்னர் தமிழக பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அ.தி.மு.க. ஒன்றுபட்டு இருப்பதையே பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகின்றனர்.

Related Stories: