வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம்: பாமக தலைவர் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் நேற்று முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து பேசினர்.

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழகமெங்கும் பல்வேறு கட்டங்களில்  போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் சென்னை, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள முதல்வரின் இல்லத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை நேற்று இரவு சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினர். வன்னியர் சமூகத்திற்கான 20% இட ஒதுக்கீடு தொடர்பாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: