ராமநாதபுரம் மாவட்டத்தின் 4 தொகுதியிலும் பா.ஜனதா போட்டி? எல்.முருகன் பேச்சு: அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வார்கள் என மாநில தலைவர் முருகன் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் முருகன் நேற்று வந்தார். சத்திரக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘பாஜ கட்சி தமிழ்நாட்டில் எங்கே உள்ளது? காலூன்ற   முடியுமா என கேட்டனர். ஆனால் பாஜக இல்லை என்றால், தமிழக அரசியலே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. 2012ல் மதுரையில் நடந்த கூட்டத்தில் ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கூடிய விரைவில் நல்ல அறிவிப்பு வரும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கட்சியினர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்’’ என்றார்.

ஏற்கனவே பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என வலைத்தளத்தில், ஒரு பட்டியல் வெளியானது. அதில் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் மற்றும் அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளின் பெயர்களும் இருந்தன. இதனால் பாஜக மீது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் என முருகன் குறிப்பிட்டு பேசியது, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related Stories: