மதுரை : அதிமுக கூட்டணியில் 40 தொகுதி கேட்டு நிர்பந்தம் செய்யவில்லை என பாஜ மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் இன்று கூறுகையில், ‘பாஜவில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் தை 1ம் தேதி முதல் பரப்புரை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். அதுவே பாஜகவின் தேர்தல் அறிக்கையாக இருக்கும்.