டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் குளிர் மற்றும் மழையில் 42-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: டெல்லி மாநில எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் குளிர் மற்றும் மழையில் 42-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 42 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் நடத்திய 7ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்வர் 26ஆம் தேதி டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.

காவல்துறையினரின் தடைகளை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகள், டெல்லியின் புராரி மைதானத்தில் முகாமிட்டனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ஒரு வருடம் ஆனாலும் இந்த போராட்டம் ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்த விவசாயிகள், தொடர்ந்து 42 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடும் குளிர் பனி மூட்டம் நிலவி வருகிறது. சாலைகளில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு ட்ராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கிக் கொண்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை.

இது வரை நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தால் இனி பேச்சுவார்த்தையே கிடையாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராடும் விவசாயிகளுக்கு, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள், மற்றும் பிற அமைப்புகள் சார்பில் உணவு, படுக்கை, கூடாரம் உள்ளிட்ட, பலதரப்பட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் போரட்டத்திற்கு ஆதரவும் அதிகரித்து வருகின்றது.

Related Stories: