கொரோனா தொற்று காரணமாக மைசூரு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை குறைப்பு: துணைவேந்தர் ஹேமந்த்குமார் தகவல்

மைசூரு: கொரோனா தொற்று காரணமாக மைசூரு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வேந்தர் ஹேமந்த் குமார் தெரிவித்தார். மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஹேமந்த் குமார் கூறுகையில், மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்ேபாது எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பியூசி கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. முதுநிலை கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு வகுப்புகளை திறக்க அனுமதிக்கும்படி அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

 நூறு ஆண்டுகள் பெருமை வாய்ந்த மைசூரு பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல் துறை சார்பாக  ஜனவரி 6ம் ேததி புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி  நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கி பயன்பெற ேவண்டும்.மேலும் மைசூரு பல்கலைக்கழகத்தின் சார்பில் கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 6 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 6 கிராமங்கள் தத்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக மேம்படுத்தப்படும். இவ்வாறு பல்கலைக்கழக வேந்தர் ஹேமந்த் குமார் தெரிவித்தார்.

Related Stories: