கொள்ளையனே வெளியேறு என குரல் கொடுங்கள் டீக்கடை, பூக்கடை வைத்திருந்தவர் 10 தலைமுறைக்கு சொத்து சேர்ப்பு: சேலத்தில் கமல் பேச்சு

சேலம்: மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று தேர்தல் பிரசாரத்தை சேலத்தில் தொடங்கினார். இதற்காக சென்னையில் இருந்து பிற்பகல் தனி விமானம் மூலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். இதை தொடர்ந்து, சேலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார். ஏற்காடு ஏரி அருகே ரவுண்டானா பகுதியில் கமல்ஹாசன் பேசுகையில், ‘சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பதை கேலி செய்தவர்கள், இப்போது எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள். இவர்கள் வழிவிடமாட்டார்கள். நாம் தான் ஏற்படுத்த வேண்டும்.

விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சமஉரிமை, சம ஊதியம் என்பதே நமது லட்சியம். மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைத்தால், அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். பெண்கள் நினைத்தால் ஆட்சியை மாற்றலாம். நல்ல அரசை மக்கள் பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டது. எதையெல்லாம் சீரமைக்க வேண்டுமோ, அதையெல்லாம் பணமாக்கி கொள்கின்றனர். டீக்கடை வைத்திருந்தவர், பூக்கடை வைத்திருந்தவர் எல்லாம் 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டனர். மக்கள் தங்களது அடுத்த தலைமுறைக்காவது சொத்து சேர்க்க வேண்டாமா? கொள்ளையனே வெளியேறு என மக்கள் நீதி மய்யத்தோடு சேர்ந்து நீங்கள் ஒலிக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related Stories: