சேலம்: சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொள்ளாச்சியில் ஏராளமான இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.