புத்தாண்டை கொண்டாட்டத்தில் அச்சுறுத்த ‘ஓநாய்’ முகமூடி அணிந்து வாலிபர் குறும்பு: கைது செய்தது பாகிஸ்தான் போலீஸ்

பெஷாவர்: கொரோனா பரவலை தடுக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் தற்போது மக்கள் பயன்பாட்டு பொருளில் ஓர் அங்கமாகிவிட்டது. கொடிய கொரோனா வைரசிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முகக்கவசங்கள் அவசியமானது என்றாலும், தற்போது விதவிதமான மாஸ்க்-கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பெஷாவரில் நேற்றிரவு புத்தாண்டு தினத்தன்று ஒருவர்  ‘ஓநாய்’ போன்ற முகமூடி அணிந்திருந்தார்.

அவரது இந்த புகைப்படத்தை தமது டுவிட்டரில் பகிர்ந்தார். இது சமூக வலைத்தில் வைரலாவது. இவரது இந்த ஓநாய் முகமூடியை பலர் கிண்டலடித்து நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பொதுமக்களை பயமுறுத்தும் விதத்தில் அவர் முகமூடி அணிந்திருந்ததால் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் ஒமர் ஆர் குரைஷி என்பதும், குறும்புதனமாக இந்த வேலையை செய்ததாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.

Related Stories: