ஜம்மு-காஷ்மீரில் ஓராண்டில் 225 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங், 2020ம் ஆண்டில் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் திட்டமிட்டு 100 வெற்றிகரமான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 90 திட்டமிட்ட தாக்குதல்கள் காஷ்மீரிலும், 13 தாக்குதல்கள் ஜம்முவிலும் நடந்துள்ளன. இந்த தாக்குதல்கள் மற்றும் பதிலடி தாக்குதல்களில் கடந்த ஓராண்டில் 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் 47 தீவிரவாதிகள் பல்வேறு அமைப்புகளின் உயர்மட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள்.

தீவிரவாதிகளுக்கு எதிரான பதிலடி தாக்குதலின் போது, ஜம்மு-காஷ்மீரில் 16 காவலர்களும், 44 பாதுகாப்புப்படை வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களின் செயல்பாடுகளால் பள்ளத்தாக்கில் பல இடங்கில் பதுங்கியிருந்த பல தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர். 2020ம் ஆண்டை பொறுத்தமட்டில் எல்லைப் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள், ஊடுருவல், பொதுமக்கள் மீதான தாக்குதல் ஆகியவை குறைந்துள்ளன’ என்றார்.

Related Stories: