ரூர்கேலா: உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மைக்கேல் கோன்டா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்திய ஹாக்கி முன்னாள் வீரர் மைக்கேல் கோன்டா. 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி அணியிலும், 1975-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றவர் ஆவார். வெண்கலம் வென்ற அந்த ஒலிம்பிக்கில் 3 கோல்கள் அடித்திருந்தார்.