மாகாண ஒழிப்பு திட்டத்தால் ஈழத் தமிழர்களின் சுயமரியாதை பறிபோவதா?: இலங்கை அரசுக்கு திமுக கண்டனம்

சென்னை:திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை: ராஜபக்சே சகோதரர்களின் மாகாணங்களை ஒழிக்கும் திட்டம், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது. அந்தச் சட்டத் திருத்தத்தையே அகற்றி விடும் ஆணவம் மிக்க, அக்கிரமமான  நடவடிக்கை இது.

தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்போம்-அதுவும் 13வது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரம் அளிப்போம் என்றெல்லாம் பேசி விட்டு, தற்போது தமிழர்களுக்கென இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை, இந்திய அரசு எப்படி-ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும்  பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக்  கைவிட வேண்டும் என்றும்-அப்படியொரு முடிவு,”இந்திய-இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: