புத்தாண்டு முதல் புதிய மணல் கொள்கை அமல்: அமைச்சர் சி.சி.பாட்டீல் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் புதிய மணல் கொள்கை புத்தாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று கனிமவளத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ``மாநிலத்தில் கட்டுமான பணிக்கு தேவைப்படும் பொருட்களில் அத்தியாவசியமானதாக மணல் உள்ளது. இதை மணல் மாபியா கும்பல் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு கொள்ளை லாபத்தில் விற்பனை செய்கிறார்கள். இது நடுத்தர வர்க்கத்தினரை வெகுவாக பாதிக்கிறது. இதை தவிர்க்கும் நோக்கத்தில் புதிய மணல் கொள்கை அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டது. இடையில் கொரோனா தொற்று பரவல் தடையாக இருந்ததால் செயல்படுத்தவில்லை.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் புத்தாண்டில் புதிய மணல் கொள்கை அறிமுகம் செய்யப்படும். ஒரு டன் மணல் ரூ.300 முதல் 350 வரையில் கிடைக்கும் வகையில் புதிய கொள்கையில் அம்சங்கள் இருக்கும். மேலும் ஊரகம், நகரம் என்ற வித்தியாசமில்லாமல் மூன்று கட்டங்களாக மணல் அள்ளுவது மற்றும் விற்பனை செய்யவும் புதிய கொள்கையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் எங்கெல்லாம் மணல் வளம் உள்ளது என்பதை டிரோன் கேமரா மூலம் கண்டறியப்படும் என்றார்.

Related Stories: